மத்திய அரசு திட்டம்: அடமானம் இல்லாமல் ரூபாய் 3 லட்சம் தொழில் கடன் - Nambirajan.site
PM Vishwakarma - பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா
PM Vishwakarma - பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கல் உடைபவர்கள் , இரும்பு கருவிகள் தயாரிப்பாளர்கள், மரவேலை தச்சர்கள், செருப்பு காலணி தைப்பவர், செருப்பு காலணி செய்பவர், தங்கம் வெள்ளி பொற்கொல்லர், மண்பானை குயவர், சிலை தயாரிப்பாளர்கள், சிற்பிகள், மேஸ்திரி கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், அயனிங் சலவைத் தொழிலாளர், தையற்காரன் துணி தைப்பவர் டெய்லர், மீன் வலை தயாரிப்பாளர்கள் உட்பட, 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன் பெற உள்ளார்கள்.
15,000 ரூபாய் நிதியுதவி:-
மேலும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் பயிற்சி பெற்ற பின்னர் தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் கடன் உதவியாக அதை 18 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன் பிறகு மேலும் ரூ. 2 லட்சம் கடன். அதை 30 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
0 Comments